ჯგუფები სურათები განახლებები ინტერნეტი კატალოგი
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
கல்வித் தகவல் மற்றும் செய்திகள்........!
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  4 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
Sankaranarayanan Devarajan  
View profile  
 More options Jul 29, 10:15 pm
From: Sankaranarayanan Devarajan <sankaradevara...@gmail.com>
Date: Thu, 29 Jul 2010 23:45:17 +0530
Local: Thurs, Jul 29 2010 10:15 pm
Subject: கல்வித் தகவல் மற்றும் செய்திகள்........!

*கல்வித் தகவல்* <http://kalvithagaval.blogspot.com/>
"எதிர்காலத்துக்கு பெற்றோர் பங்கு அதிகம்': மாணவர்களுக்கு துணைவேந்தர்
அறிவுரை<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_2136.html>
 [image: VC's Image] <http://www.bdu.ac.in/images/vc.jpg>திருச்சி: திருச்சி
பாரதிதாசன் பல்கலை வணிகவியல் மற்றும் நிதிக்கல்வித்துறை சார்பில், பெற்றோர்,
ஆசிரியர், முன்னாள் மாணவர் மற்றும் புதுமுக மாணவர் சந்திப்புக் கூட்டம்
நடந்தது.

இந்தாண்டுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டு துணைவேந்தர் மீனா பேசியதாவது: தரம்
வாய்ந்த பாடப்புத்தகத் தை வெளியிட்ட துறைத்தலைவர் செல்வம் பாராட்டுக்குரியவர்.
மாணவர்களின் திறன் மேம்பாடு, ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம், வேலைவாய்ப்புக்கான
ஏற்பாடு என்று துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றன. இப்பாடத் திட்டத்தை
பயில்வதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு பெறலாம். மாணவர்களின் எதிர்காலத்தை
பொறுத்தவரை, மாணவருக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோருடைய பங்கு அதிகம்.
இத்துறையின் பலமான முன்னாள் மாணவர்களின் அனுபவத்தை கொண்டு, புதுமுக மாணவர்
சிறப்பாக கல்வி கற்கலாம். தொழிற்சாலை, கல்விநிறுவனம், இவையிரண்டும் இணைக்கின்ற
ஓர் புள்ளி ஆகியன வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

            நூலகப் பணியாளர் தேர்வு: விண்ணப்பம்
விநியோகம்<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_5007.html>
  <http://i3.ytimg.com/vi/vKI9Tqt5g_o/default.jpg>சென்னை, ஜூலை 28: சென்னை
கோட்டூர்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு
99 நூலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 இதற்கான தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சென்னை
மாவட்ட நூலக அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன.

    3 பதவிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும். ஒரு பதவிக்கு ரூ.500 கட்டணம்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250 வீதம் கட்டணம்
வசூலிக்கப்படும்.  குறிப்பிட்ட நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணிவரை பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 மாவட்ட நூலக அலுவலர், 735, அண்ணாசாலை, சென்னை என்ற முகவரியில் விண்ணப்பம்
கிடைக்கும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
கார்ப்பரேசன் வங்கி ஆகிய வங்கிக் கிளைகளிலும் விண்ணப்பப்படிவங்கள் விற்பனை
செய்யப்படுகின்றன என்று மாவட்ட நூலக ஆணைக் குழு அறிவித்துள்ளது.
            "ஈரோடு புத்தகத் திருவிழா
2010'<http://kalvithagaval.blogspot.com/2010/07/2010-30-10.html>
 [image: [2010-chennai-book-fair-09.jpg]]<http://4.bp.blogspot.com/_sb9yp2CsJVU/S0r6NutBoJI/AAAAAAAAQfg/4nKKSDc...>
"ஈரோடு
புத்தகத் திருவிழா 2010' ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஜூலை 30-ம் தேதி
(வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெறும் இந்தத் திருவிழா தினசரி
காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை உண்டு.

 இது குறித்து அந்தப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கூறியிருப்பது:

 புத்தகத் திருவிழாவில் கிடைப்பதற்கரிய புத்தகங்கள் கிடைக்கும். அனைத்து
புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அறிஞர்கள், கல்வியாளர்கள்,
சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவை
தினசரி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு  *www.erode​bookfestiv​al.com​*  என்ற இணையதளத்தைத்
தொடர்பு கொள்ளலாம்.

 புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ஈ.ரோடு வ.உ.சி. பூங்காவில் (பஸ் நிலையம்
அருகில்) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

 இதில் அரசு பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற
மாணவர்களுக்கு பொது நூலகத் துறை இயக்குநர் க. அறிவொளி பரிசுகள் வழங்கி
சிறப்புரையாற்றுகிறார்.

 ஈரோடு மேயர் கே. குமார் முருகேஸ், துணை மேயர் பா. வெங்கடாசலம், மக்கள்
சிந்தனைப் பேரவை தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன், ஐ. மாயாண்டிபாரதி,
கி.லட்சுமிகாந்தன் பாரதி, ஈரோடு கட்டுனர் கல்வி அறக்கட்டளை தலைவர்
எஸ்.பி.பெரியசாமி, டி.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்
சி. தேவராஜன், பி.ஏ.பி.ஏ.சி.ஐ. செயலர் ராம.லெட்சுமணன், தமிழ், ஆங்கில புத்தகப்
பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்'
என்று கூறியுள்ளார்.

அகில இந்திய தரைப்படை மாணவர் பயிற்சி முகாமுக்கு தேர்ச்சிப்பெற்ற திருச்சி
என்.சி.சி., மாணவருக்கு
பாராட்டு<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_9833.html>
 <http://stmarysschooldwarka.in/yahoo_site_admin/assets/images/ncc-1.35...>திருச்சி:
டில்லியில் நடக்கும் அகில இந்திய தரைப்படை மாணவர் பயிற்சி முகாமுக்கு
தேர்ச்சிப்பெற்ற திருச்சி என்.சி.சி., மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.

மதுரையில் திருச்சி 2 (டி.என்) கவசப்படை என்.சி.சி., மாணவருக்கான, ...

read more »


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Sankaranarayanan Devarajan  
View profile  
 More options Jul 29, 10:18 pm
From: Sankaranarayanan Devarajan <sankaradevara...@gmail.com>
Date: Thu, 29 Jul 2010 23:48:11 +0530
Local: Thurs, Jul 29 2010 10:18 pm
Subject: Re: கல்வித் தகவல் மற்றும் செய்திகள்........!

*கல்வித் தகவல்* <http://kalvithagaval.blogspot.com/>

திருச்சி "பெல்'லுக்கு தேசிய
விருது<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_8681.html>
  <http://navalpattu.files.wordpress.com/2009/11/bhel-trichy.jpg>
திருச்சி: திருச்சி பெல் நிறுவனத்துக்கு உற்பத்தி செலவு மேலாண்மையில் சிறப்பாக
செயல்பட்டதற்காக ஐ.சி.டபுள்யூ.ஏ.ஐ., (இந்திய உற்பத்தி செலவு மற்றும் முதலீட்டு
கணக்காயர் கழகம்) சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான தேசிய விருது
கிடைத்துள்ளது.

டில்லியில் உள்ள ஐ.சி.டபுள்யூ.ஏ.ஐ., நிறுவனம் சார்பில் கடந்த 2003ம் ஆண்டு
முதல் பொதுத்துறையில் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனத்துக்கு தேசிய அளவில் விருது
வழங்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்ய
அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையிலான குழுவானது
திருச்சி பெல் நிறுவனத்தை உற்பத்தி செலவு மேலாண்மையில் சிறப்பாக
செயல்பட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்து அறிவித்தது.

அண்மையில் டில்லியில் நடந்த விழாவில் நிறுவனங்கள் விவகாரத்துறை மத்திய அமைச்சர்
சல்மான் குர்ஷித் இவ்விருதை திருச்சி பெல் நிறுவனத்துக்கு வழங்கினார். விருதை
பெல் நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசாத் ராவ் மற்றும் திருச்சி
பெல் நிதித்துறை பொதுமேலாளர் ஜம்புநாதன் கூட்டாக பெற்றுக் கொண்டனர். இதுதவிர
பெல் நிறுவனத்தின் பெங்களூரு மின்னணு பிரிவு மற்றும் எலக்ட்ரோ போர்சலைன்
பிரிவு, ஜான்சி, ஹரித்துவார் மற்றும் ராணிப்பேட்டை பெல் நிறுவனங்களும் பல்வேறு
பிரிவுகளில் விருது வென்றுள்ளது. தேசிய அளவில் வழங்கப்படும் விருதை தனியார்
மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான எண்ணிக்கையில் பெல் நிறுவனம்
வென்றுள்ளது. உற்பத்தி செலவு மேலாண், தரம் மற்றும் வழங்குதல் ஆகியவற்றில்
சிறப்புடன் செயல்பட்டதால் திருச்சி பெல் நிறுவனத்துக்கு தேசிய விருது
வழங்கப்பட்டுள்ளது.

பெல் நிறுவனம் கடந்த 30 ஆண்டாக தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவன வளர்ச்சியானது 34 ஆயிரத்து 154 கோடி ரூபாய் விற்றுமுதலை அடைந்து 21
சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி திட்டத்தில் பெல்
நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் மெகாவாட்
அளவில் தனது உற்பத்தித் திறனை வளர்த்துள்ள பெல் நிறுவனம், அதை ஆண்டுக்கு 20
ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

            திருச்சி மாவட்டத்தில் 12 புதிய பள்ளிகள்
துவக்கம்<http://kalvithagaval.blogspot.com/2010/07/12.html>
  <http://indiasudar.files.wordpress.com/2008/11/dsc05802.jpg>
திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டர் (பொ) ராமன் வெளியிட்ட அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் முசிறி ஒன்றியத்தில் பஞ்சாம்பட்டி,
வையம்பட்டி ஒன்றியம் மீனாட்சியூர், தெற்கு அம்மாபட்டி, கூடத்திப்பட்டி,
கடப்பமரத்துப்பட்டி. மணப்பாறை ஒன்றியத்தில் தாதநாயக்கன்பட்டி, படுகளம்
பூசாரிப்பட்டி, பொன்னுச்சங்கம்பட்டி, பெம்மம்பட்டி, மருங்காபுரி ஒன்றியத்தில்
பீரங்கிமேடு, மான்பாஞ்சாம்பட்டி, காடையம்பட்டி ஆகிய இடங்களில் 12 புதிய
துவக்கப்பள்ளிகள்
துவங்கப்பட்டுள்ளன.

துறையூர் ஒன்றியம் மதுராபுரி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தில்லாம்பட்டி, லால்குடி
ஒன்றியம், தெற்குசத்திரம், அகலங்கநல்லூர் புதுத்தெரு, நத்தமாங்குடி, வையம்பட்ட
ஒன்றியம் பாம்பாட்டிப்பட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் காமாட்சிபுரம்,
மணிகண்டம் ஒன்றியத்தில் ஒலையூர், எம்.ஜி.ஆர்., நகர், யாகப்புடையான் பட்டி,
மட்டப்பாறைப்பட்டி. மருங்காபுரி ஒன்றியத்தில் பில்லுப்பட்டி, சொக்கம்பட்டி,
முசிறி ஒன்றியத்தில் மேலக்கொட்டம், சின்னகொடுந்துறை என மொத்தம் 15
துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

             மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் செல்வம் இன்ஜினியரிங்
கல்லூரி சாம்பியன்<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_6285.html>
 <http://t1.gstatic.com/images?q=tbn:61VRn-kXEwRB2M:http://www.midwestd...>
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் செல்வம்
இன்ஜினியரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. திருச்செங்கோடு
செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாமக்கல் பளு தூக்கும் சங்கம்
சார்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடந்தது.  அதில் செல்வம்
இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ., டிரிபிள் இ படிக்கும் மாணவன்
அனிஷ்குமார் 100 கிலோ எடைப்பிரிவில் முதல் இடத்தையும், அதே பிரிவில் மூன்றாம்
ஆண்டு படிக்கும் மாணவன் ஜார்ஜ்ஸ்டீபன் 85 கிலோ எடைப் பிரிவில் முதல்
இடத்தையும், தயாநிதி 69 கிலோ எடைப்பிரிவில் முதல் ...

read more »


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Sankaranarayanan Devarajan  
View profile  
 More options Jul 29, 10:33 pm
From: Sankaranarayanan Devarajan <sankaradevara...@gmail.com>
Date: Fri, 30 Jul 2010 00:03:17 +0530
Local: Thurs, Jul 29 2010 10:33 pm
Subject: Re: கல்வித் தகவல் மற்றும் செய்திகள்........!

> *கல்வித் தகவல்* <http://kalvithagaval.blogspot.com/>

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல்
செய்முறை பயிற்சி
முகாம்<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_8551.html>
 <http://www.dsgroups.org/images/stories/images/homepage/2.jpg>
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் இயற்பியல் செய்முறை பயிற்சி முகாம் கல்லூரி ஆடிட்டோரியத்தில்
நடந்தது. பயிற்சி முகாமுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர்
சீனிவாசன் தலைமை வகித்தார்.  கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை
தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மஞ்சுநாயர் அறிமுக உரையாற்றினார். முகாமில் புத்தனாம்பட்டி நேரு
நினைவுக்கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேந்திரன் இயற்பியல் செய்முறை குறித்து
பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆலோசகர் ராமமீனாட்சி, முதல்வர்
அனுஷாபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக பேராசிரியர் சரண்யா வரவேற்றார்.
துறை தலைவர் அத்துல்யாநாயர் நன்றி கூறினார்.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான "சர்வே'யில் வி.ஐ.டி., பல்கலை.8-ம்
இடம்<http://kalvithagaval.blogspot.com/2010/07/8_29.html>
 சென்னை : நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி மையங்கள் குறித்து தனியார் நிறுவனம்
நடத்திய "சர்வே'யில், வேலூர் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் எட்டாவது இடத்தை
பிடித்துள்ளது."இந்தியா டுடே' இதழ், ஏ.சி., நீல்சன் ஓ.ஆர்.ஜி., மார்க்
நிறுவனமும் இணைந்து நாட்டின் சிறந்த பொறியியல், மருத்துவம், சட்டம், கலை,
அறிவியல் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு சிறந்த
பொறியியல் கல்வி மையங்களுக்கான தரவரிசையில், வேலூர் வி.ஐ.டி., பல்கலைக் கழகம்
எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
<http://www.vit.ac.in/images/aarial_thumb.png>சிறந்த பொறியியல் கல்வி
மையங்களில் கான்பூர் ஐ.ஐ.டி., முதல் இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாம்
இடத்தையும் பிடித்துள்ளன.சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் டில்லி எய்ம்ஸ் முதல்
இடத்தையும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும்
பிடித்துள்ளன.சிறந்த சட்டக் கல்லூரிகளில் பெங்களூரு தேசிய சட்ட கல்லூரி முதல்
இடத்தை பிடித்துள்ளது."வி.ஐ.டி., பல்கலைக் கழகம், கடந்த 25 ஆண்டுகளாக கல்வித்
துறையில் சிறந்து விளங்குவதற்காக பாடுபட்டு வருகிறது.இந்தியா டுடே
ரேங்கிங்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக டாப் 10 இடத்தில் இருந்து வருகிறது.இந்த
ஆண்டு ஆராய்ச்சித் திட்டங்களில் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் அதிக கவனம்
செலுத்தியதன் மூலம், "ரேங்கிங்'கில் வி.ஐ.டி., பல்கலைக் கழகம் எட்டாவது இடத்தை
பிடித்துள்ளது' என அப்பல்கலைக் கழக துணைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஸ்டாலின் பரிசு வழங்கி
பாராட்டு<http://kalvithagaval.blogspot.com/2010/07/blog-post_29.html>
 <http://www.topnews.in/files/MK-Stalin.jpg>சென்னை : பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள்
மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவ, மாணவியருக்கு துணை முதல்வர்
ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து, இந்த
ஆண்டு நடந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்த
மாணவர்களில், மாநில அளவில் தலா முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, துணை
முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் பாராட்டு பத்திரமும், தலா 10 ஆயிரம்
ரூபாய் பரிசுத் தொகையும் நேற்று வழங்கினார்.இதில், 10ம் வகுப்பு தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற்ற 30 பேருக்கு பரிசுத் தொகையும், பாராட்டு பத்திரமும்
வழங்கப்பட்டது. இவர்களில் 27 பேர் மாணவியர், மூன்று பேர் மாணவர்கள்.அதேபோல,
பிளஸ் 2 தேர்வில் முதலாவதாக வந்துள்ள 25 பேரில், 24 பேர் மாணவியர், ஒருவர்
மாணவர்.
இவர்களுக்கு பரிசுத் தொகையுடன், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு
பட்டப்படிப்பு மேற்கொள்ள உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியின் போது, நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் அசோக் வரதன்
ஷெட்டி, நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல்
மூன்று இடங்களை பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர், மாணவி ஒருவர், மிகவும்
பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மாணவி
ஒருவர், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மாணவி ஒருவர் என ஆறு முதல்
பரிசுகள், ஆறு இரண்டாம் பரிசுகள், ஆறு மூன்றாம் பரிசுகளை தமிழக அரசு
வழங்குகிறது.இந்த ஆண்டு ...

read more »


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத்-VINOTH  
View profile  
 More options Jul 30, 8:17 am
From: வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
Date: Fri, 30 Jul 2010 09:47:22 +0530
Local: Fri, Jul 30 2010 8:17 am
Subject: Re: [தமிழ் நண்பர்கள்] Re: கல்வித் தகவல் மற்றும் செய்திகள்........!

நல்ல பயனுள்ள தகவல்களை தொகுத்துத்தருகிறீர்கள், மிக்க நன்றி

--
*வினோத் கன்னியாகுமரி*
*http://tamil2friends.com/friends/vinoth*


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google