''இளைஞர்களை இசை மூலமாகச் சந்திப்பேன்!''
இளையராஜாவின் புதிய திட்டம் .
*எ*ப்போதும் கலகலக்கும் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வளாகம், அன்று பவ்யமும்
திவ்யமுமாக நிறைந் திருந்தது. காரணம், ராஜா!
கல்லூரி விழாவுக்கு வந்திருந்தவரிடம், ''பத்மபூஷ ணுக்கு வாழ்த்துக்கள்!'
என்றேன். சின்னப் புன்னகை யுடன் ''காரில் ஏறுங்க'' என்றார். கோடம்பாக்கமே தவம்
இருக்க, அபூர்வமாக புன்னகைத்துக் கடக்கிற அதே ராஜா, பழைய ஞாபகங்களில் தொடங்கி
இந்த நொடி வரை ஒரு நதியாக வளைந்து நெளிந்து பெருகும் மெட் டைப் போலவே அரிதான
உரையாடலில் தொடங்கினார்.
''பத்மபூஷண் விருது உங்களுக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனாலும்,
20 வருடங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருக்கணும்னு பேசிக்கிறாங்க. எப்படி
உணர்றீங்க?''
''விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. மிகுந்த மரியாதையுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக்கும், தமிழ் இசைக்கும், தமிழ் இசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த
உயரிய கௌரவமாகக் கருதுகிறேன்!''
''இத்தனை வருடங்களாக நாங்க இளையராஜாவைப் பார்த்த பிரமிப்பும், கொடுத்த
மரியாதையும், இந்தத் தலைமுறை மாணவிகளிடமும் இருக்கு. திரையிசையில் மாபெரும்
வெற்றி பெற்ற உங்களின் அடுத்த திட்டம் என்ன?''
''திட்டமிட்டு எதையும் நான் செய்யறது இல்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது
நம்ம கையிலா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது.
'அன்னக்கிளி' ஆரம்பிச்சு 25 படம் வரைக்கும் பிளான் பண்ணி மியூஸிக்
போட்டிருக்கலாம். அப்புறம் ஆன்மிகம், தெய்வ நம்பிக்கைன்னு வந்த பின்னாடி,
எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். How to name it, Nothing but wind,
திருவாசகம் எல்லாமே தானாக நிகழ்ந்ததுதான். காற்றுபோல, ஒளிபோல இசையும் பரவி
யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுகிற இசை மழை
யில் எங்கேயாவது, யாராவது துளிர்க்கணும்... பூக்கணும். அடையாளம் தெரியாத இந்தப்
பயணத்தை இசை செய்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னைப்
புதுப்பிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இயங்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல
சூழலில் என்னை இறைவன் வைத்திருக்கும்போது, நான் நிறைவாக உணர்வது தானே நியாயம்?
நமக்குத் தெரிஞ்ச இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும்
தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நான் எடுத்துட்டுப் போக ஒண்ணுமே இல்லை.
கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு. எனது அனுபவத்தைப் பகிரவும் இளைய தலைமுறைக்கு
விட்டுட்டுப் போகவும் தயாரா இருக்கேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து
இளைஞர்களை இசை மூலமா ஒன்றிணைக்கணும். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு
பார்க்கலாம்!''
''கொடுத்துட்டுப் போவதாக இருந்தால், அதை எந்த மாதிரி செய்யலாம்னு, அதற்கான
செயல்திட்டம் என்ன?''
''உலகத்தோட ஒரு பக்கத்துல பீத்தோவன், மொஸார்ட்னு இருந்திருக்காங்க. நம்ம பக்கம்
தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, அருணாசலக்
கவிராயர், முத்துத் தாண்டவர்னு இருந்தாங்க. எல்லாமே 18-ம் நூற்றாண்டோடு
முடிஞ்சுபோச்சு. அதற்குப் பிறகு இன்னொரு மொஸார்ட் வரவே இல்லை. உலகம்
தோற்றுவிக்கலைன்னு அர்த்தம் கிடையாது. அந்த நிகழ்வு நடை பெறலை. புரந்தரதாசர்
வரைக்கும் அவங்க பங்குக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டுப் போயாச்சு.
எனக்கு என்ன தோணுதுன்னா, இப்ப இருக்கிற கர்னாடக, இந்துஸ்தான், வெஸ்டர்ன்
மியூஸிக்கோடு அதன் எல்லைகள் முடிஞ்சு போச்சா? இல்லைதானே! உண்மையான... இன்னும்
உன்னதமான இசை எங்கேயோ இருக்கு. அந்த இசைதான் என் தேடுதலா இருக்கு. இதற்கு நான்
பதில் அறியாமலும் போகலாம். ஆனா, என்னிக்காவது ஒரு நாள் இதுக்குப் பதில்
கிடைக்காமல் போகாது. போய் ஊடுருவிப் பார்க்கிறவங்க கண்டுபிடிப்பாங்க. என்
கையில் விதை இருக்கு. விதைக்காமல் போனால் வித்துக்கும் நஷ்டம்... உயிருக்கும்
நஷ்டம். இந்த ஊரில் இருந்தே 200 பீத்தோவன், 200 தியாகராஜ சுவாமிகள் வரட்டுமே.
வறுமையில் வாழ்ந்துட்டு இசை படைத்தவர் தியாகராஜ சுவாமிகள். இத்தனை தியாகராஜ
சுவாமிகள் வரணும்னு சொன்னது திறமையைவெச்சுச் சொல்லலை. திறமைங்கிறது வித்வத்வம்,
பண்டித்துவம், அது கர்வத்தை மட்டுமே வளர்க்கும்.
என் அனுபவத்திலே நிறைய இருக்குன்னு சொல்லும்போது இதைத் தெரிஞ்சுக்க ஓர் அமைப்பு
இல்லைங்கிறது என்னுடைய துரதிருஷ்டமா, நாட்டின் துரதிருஷ்டமா?''
''கலைஞனுக்குச் சமூகத்தின் மேல் அக்கறை இருக்கணும் என்கிறது ஒரு தரப்பு. அப்படி
எல்லாம் இல்லை. கலைஞன் வேறு மாதிரி, அவன் தனிமையானவன்கிறது வேற தரப்பு.
இரண்டில் எது சரி?''
''இரண்டு
...
read more »